×

சுதந்திர தினம்..முழு ஊரடங்கு என தொடர் விடுமுறை: நேற்று ஒரே நாளில் ரூ.248 கோடிக்கு மதுபானங்களை வாங்கி குவித்த மது பிரியர்கள்!

சென்னை: தமிழகத்தில் நேற்று மட்டும் ரூ.248  மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் சனிக்கிழமை ரூ. 189.38 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்ற  நிலையில், இந்த வாரம் கூடுதலாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இன்று சுதந்திர தின விடுமுறை மற்றும் நாளை தமிழகம் முழுவதுமாக எந்தவித தளர்வும் இன்றி கடும்  கட்டுப்பாட்டுடன் முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுவதே மதுபானங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதற்கு காரணமாக உள்ளது. தொடர்ந்து 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்ற காரணத்தால், தங்களுக்கு தேவையான மதுபான வகைகளை நேற்றே மதுப்பிரியர்கள் மொத்தமாக வாங்கிச் சென்றனர்.

இதனால், நேற்று எப்போதும் இல்லாத அளவுக்கு 248 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  இதில், அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 56 கோடியே 45 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், திருச்சி மண்டலத்தில் ரூ.55.77 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், சேலம் மண்டலத்தில் ரூ,54.60 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.49.77 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் ரூ.31.50 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால், 2 நாள் விடுமுறை என்பதால் ரூ.250 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.248.10 கோடிக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : holiday ,lovers ,Independence Day ,Liquor lovers , Tasmac,, alcohol,sales
× RELATED சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் 19ஆம் தேதி விடுமுறை!