×

அச்சம், வறுமை, அடக்குமுறையிலிருந்து விடுதலை என்பதே சுதந்திரம்: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்

சென்னை: அச்சம், வறுமை, அடக்குமுறையிலிருந்து விடுதலை என்பதே சுதந்திரம் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்  கூறியுள்ளார். 74வது சுதந்திர தின கொண்டாட்டம் ஆகஸ்ட் 15 ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 7வது முறையாக தேசியக்கொடியை ஏற்றினார். அப்போது நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, கொரோனாவுக்கு விரைவில் தடுப்பூசி விரைவில் மக்களுக்கு அளிக்கப்படும் என்றும் கொரோனாக்கு எதிரான போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம், என்றும் நம்பிக்கை தெரிவித்தார். அதேபோல், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் இன்று கொடியற்றினார்.

மேலும் சுதந்திர தின நன்னாளில் நாட்டு மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், எந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு. சுதந்திரம் அல்லது விடுதலை என்பது அச்சத்திலிருந்து விடுதலை, வறுமையிலிருந்து விடுதலை, அடக்குமுறையிலிருந்து விடுதலை. எல்லோருக்கும் என் சுதந்திர நாள் வாழ்த்துக்கள், என கூறியுள்ளார்.


Tags : P. Chidambaram , P. Chidambaram, Independence Day, Greetings
× RELATED பாஜக அரசு ஏழைகளுக்கான அரசு அல்ல;...