நெல்லையில் தற்கொலை செய்ய முயன்றவரை வேகமாகவும் துரிதமாகவும் செயல்பட்டு காப்பாற்றிய தீயணைப்பு வீரர்

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் கணேச புரத்தை சேர்ந்த 45 வயது கணேசன் என்பவர் நில அபகரிப்பு பிரச்சினை தொடர்பாக சட்ட போராட்டங்கள் பலவற்றில் ஈடுபட்டு பின்பு உண்ணாவிரதம் இருந்த பின்பு கடைசியாக தற்கொலை செய்ய வேண்டும் என்ற முடிவு செய்துள்ளார். பாளையங்கோட்டை மாநகரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சேவியர் காலனி எண் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது இன்று காலை ஆகஸ்ட் 15 தற்கொலை செய்ய முயன்ற போது பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் அவர்கள் வேகமாகவும் துரிதமாகவும் செயல்பட்டு அவரை முதலில் மடக்கி பிடித்தபோது பின் அவருடன் வந்த பணியாளர்களும் உடனடியாக அவரை மடக்கிப்பிடித்து அவரது தற்கொலை முயற்சியை மிகுந்த துணிவோடு எதிர்கொண்டு தடுத்தனர்.

தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தற்கொலை செய்யும் நோக்கில் கீழே குதிக்க முயன்ற நபரை உயிருடன் மடக்கிப்பிடித்து சுதந்திர தின நிகழ்வு இன்று நடக்கவிருந்த மிகப்பெரும் துயர நிகழ்வை தடுத்து நிறுத்திய பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் சு.வீரராஜ் மற்றும் அவரது குழுவினருக்கு அங்கிருந்த காவல்துறை மற்றும் வருவாய் துறை மாநகர உயர் அதிகாரிகளால் வெகுவாக பாராட்டப்பட்டது. அப்பகுதி பொதுமக்களும் இந்நிகழ்வை வெகுவாக பாராட்டினர். மென்மேலும் தீயணைப்புத் துறையின் பணி சிறக்க பொதுமக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Related Stories: