கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை நீக்கியது வடகொரியா: எல்லை மூடல் தொடரும் என அறிவிப்பு!

பியோங்யாங்: கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை வடகொரியா நீக்கியுள்ளது.  சீனாவில் தோன்றி உலகில் 215 நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ், வடகொரியாவில் மட்டும் நுழைய  முடியவில்லை என்ற நிலை இருந்தது. ஆனால் தென்கொரயாவில் இருந்து வடகொரியாவின் எல்லைப்பகுதி நகரான கேசாங்கிற்கு சட்டவிரோதமாக வந்த ஒருவரால் வடகொரியாவிலும் கொரோனா தடம் பதித்தது தெரியவந்தது. இதையடுத்து அதிபர் கிம் உடனடியாக அவசர நிலையை அறிவித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டிருந்தார். அதாவது, அந்த நகரின் எல்லைகள் அனைத்தையும் சீல் வைக்கவும், முழு ஊரடங்கு பிறப்பித்தும் அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த ஊரடங்கை கிம் நீக்கி இருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் எல்லை மூடலை வடகொரியா தொடரும் என்றும், பிற நாடுகளின் உதவி இதில் தேவையில்லை என்று வடகொரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்க அதிபர் கிம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவில் பல்வேறு நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகும் போது வடகொரியாவில் மட்டும் கொரோனா நோயாளிகள் குறித்த எந்த பாதிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் வடகொரியாவில் கொரோனா தீவிரம் காட்ட தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: