74வது சுதந்திர தின விழா: சென்னை, கோட்டை கொத்தளத்தில் 4-வது முறையாக தேசியக்கொடி ஏற்றி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.!!!

சென்னை: நாடு முழுவதும் 74வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் 7-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியேற்றி வைத்து உரையாற்றினார். அதேபோன்று ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த முதல்வர்கள் தேசியக்கொடி ஏற்றுவார்கள். இதன்படி, சென்னை, கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தினத்தையொட்டி கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுவது இது 4வது முறையாகும். இன்றைய முதல்வர் உரையில் முக்கிய அறிவிப்புகளையும் வெளியிடுவார்.

முன்னதாக வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் பழனிசாமி ஏற்றுக்கொண்டார். சுதந்திர தினத்தையொட்டி மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.  தொடர்ச்சியாக, சிறந்த விஞ்ஞானிக்கு மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது தலா ஒருவருக்கும், முதலமைச்சரின் நல் ஆளுமை விருது வழங்கியும் கவுரவிப்பார். இதை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிக சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழக அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள்,

சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள், முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகளும், கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய முன்கள பணியாளர்களான டாக்டர்கள், செவிலியர்கள், காவலர்கள், தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் 27 பேருக்கு முதல்வரின் சிறப்பு விருதுக்கான பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

Related Stories: