×

தமிழக பாஜ தலைவர் தகவல்: சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி மாற வாய்ப்பு உள்ளது

சென்னை: பேரவை தேர்தலில் கூட்டணி மாறவும் வாய்ப்பு உள்ளது என தமிழக பாஜ தலைவர் முருகன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:  2021 தேர்தலை சந்திக்க அனைத்து வகையிலும் தயாராக இருக்கிறோம்.  2 இலக்கத்தில் தொகுதிகளை பெறுவதையே லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.  தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கிறோம்.  அதே நேரத்தில் இப்போதுள்ள கூட்டணியை வேறு மாதிரி மாற்றி அமைக்கவும் வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டில் என்ன நடக்கும் என்பதை எங்களால் உறுதியாக சொல்ல முடியாது. கூட்டணி மாறவும் வாய்ப்பு உள்ளது.


Tags : elections ,alliance ,Assembly ,Tamil Nadu ,BJP , Tamil Nadu BJP leader, legislature election
× RELATED 2026-ம் ஆண்டு புதிய கட்சியை தொடங்க உள்ளதாக நடிகர் விஷால் அறிவிப்பு!