தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் 300 வீடுகளை இடிக்க எதிர்ப்பு: மக்கள் போராட்டத்தால் போலீஸ் குவிப்பு

தஞ்சை: தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக தஞ்சை அகழி கரைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அகழி தூர்வாரப்பட்டு வருகிறது. இதனால் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே தெற்கு அலங்கம், கொடிமரத்து மூலை போன்ற பகுதிகளில் அகழி கரையில் இருந்த ஏராளமான வீடுகள் இடிக்கப்பட்டது. இதேபோல் வடக்கு அலங்கம் பகுதியில் அகழியை ஒட்டி 300 வீடுகள் உள்ளது. இதில் 300 குடும்பத்தினர் பலஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள வீடுகளை இடிக்க குடியிருப்புவாசிகளுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை ஆக்ரமிப்புகளை அகற்ற தாசில்தார் வெங்கடேசன் மற்றும் வருவாய்துறையினர் சென்றனர். தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி கைவிடப்பட்டன.

Related Stories: