* இங்கிலாந்து பாகிஸ்தான் மோதும் 2வது டெஸ்டின் 2ம் நாள் ஆட்டம் மழை காரணமாக நேற்று தொடங்குவதில் தாமதமானது. டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான் முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்திருந்தது.
* இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையே 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் நடக்க உள்ளன. இந்த தொடர்கள் செப். 16ம் தேதி முடிவடையும் நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள வீரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் ஒருவார தனிமைப்படுத்தல் காரணமாக செப். 26ம் தேதி தான் களமிறங்க முடியும்.