×

சில்லி பாயின்ட்…

* இங்கிலாந்து  பாகிஸ்தான் மோதும் 2வது டெஸ்டின் 2ம் நாள் ஆட்டம் மழை காரணமாக நேற்று தொடங்குவதில் தாமதமானது. டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான் முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்திருந்தது.
*  இங்கிலாந்து  ஆஸ்திரேலியா இடையே 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் நடக்க உள்ளன. இந்த தொடர்கள் செப். 16ம் தேதி முடிவடையும் நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள வீரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் ஒருவார தனிமைப்படுத்தல் காரணமாக செப். 26ம் தேதி தான் களமிறங்க முடியும்.
* அமெரிக்க கூடைப்பந்தாட்ட நட்சத்திரம் மைக்கேல் ஜார்டன் அணிந்து விளையாடிய ஷூக்கள் 4.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன.
* கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் கருண் நாயருக்கு லேசான காய்ச்சல் மட்டுமே ஏற்பட்டதாகவும், கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்றும் அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.


Tags : England ,Pakistan , England ,Pakistan
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா மரின்