மழை இல்லாததால் கருகும் கடலை செடிகள்; விவசாயிகள் கவலை

திருமங்கலம்: திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மழை பொழிவு இல்லாததால் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான போல்நாயக்கன்பட்டி, பச்சகோபன்பட்டி, புல்லமுத்தூர், கரடிக்கல், செட்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் இந்தாண்டு நிலக்கடலை, சோளம், வரகு உள்ளிட்டவை பயிரிட்டுள்ளனர். ஆடிப்பட்டத்தில் விதைப்பு செய்யப்பட்ட இந்த பயிர்களுக்கு மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

விதைப்பு முடித்து செடிகள் முளைத்துள்ள இந்த ஒரு மாதகாலத்தில் போதுமான அளவு மழை இல்லை. இருப்பினும் விவசாயிகள் களைகளை எடுத்துவிட்டு உரம் போட முடிவு செய்துள்ளநிலையில் மழை இல்லை. உரம் போட்டவுடன் அதிகளவில் தண்ணீர் விட வேண்டும் என்பதால் திருமங்கலம் கடலை விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். மழை இல்லாமல் காற்று வீசுவதால் உரத்தை வயலில் போடமுடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். மழை இல்லாவிட்டால் கடலை, சோளப்பயிர்கள் கருகி பாழாகும் என கவலையுடன் விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: