×

சுதந்திர தினத்தையொட்டி எய்ம்ஸ் மருத்துவமனை ரத்ததான முகாம்: மருத்துவர்களுக்கு ஹர்ஷவர்தன் புகழாரம்

டெல்லி: சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தன்னார்வ ரத்ததான முகாமை மத்திய சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் இன்று தொடங்கி வைத்தார். இந்த முகாம் நம்நாட்டிற்கும், நாட்டின் குடிமக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கும், கோவிட் முன்னணிப் போராளிகளுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. முன்னணி சுகாதாரப் பணியாளராகப் பணியாற்றிய மறைந்த திரு.ஹீராலால் குடும்பத்தினரும், கார்கிலில் உயிர்நீத்த கார்கில் ஷஹீத் லான்ஸ் நாயக் ராஜ்வீர் சிங் குடும்பத்தினரும் கௌரவிக்கப்பட்டனர்.

இரத்த தானம் செய்தவர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் கலந்துரையாடினார். இரத்த தானத்தை ஊக்குவிக்கும் அவர்களது பணியைப் பாராட்டி அவர்களுக்கு சான்றிதழும் அமைச்சர் வழங்கினார். மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரும் விடுதலை நாளையொட்டி பெருமளவில் தாமாகவே முன்வந்து இரத்த தானம் அளிக்கவேண்டும் என்றும், நோயாளிகளின் உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவிப் பணியாளர்கள், இந்த பெருந்தொற்று காலத்தில் மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக செய்த தியாகத்தை நாம் நிச்சயம் நினைவில் கொள்ளவேண்டும் என்று அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறினார்.



Tags : Ames Hospital Blood Camp ,Harshavardhan Praises Doctors ,Independence Day ,Delhi ,AIIMS ,Harshavardhan , Blood Camp, Harshavardhan, Delhi, AIIMS
× RELATED இந்தியாவின் ‘ட்ரோன் சகோதரிகள்’...