×

சிறு தொழில் முனைவோர், வியாபாரிகளுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்க நுண் கடன் அமைப்பு: நிதின் கட்கரி தகவல்

டெல்லி: சிறு தொழில் முனைவோர்களுக்கும், வியாபாரிகளுக்கும், கடை உரிமையாளர்களுக்கும், ரூ.10 லட்சம் வரை கடன் வழங்குவதற்காக நுண் கடன் அமைப்பு பற்றிய கொள்கை இறுதியாக்கப்பட்டு வருவதாக குறு, சிறு, நடுத்தரத்தொழில்துறை, சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை உறுப்பினர் அமைப்புகளுடனும், எஃப்ஐசிசிஐ பிரிவு அமைப்புகளுடனும் நடைபெற்ற கலந்துரையாடலில், நெகிழி, ஆடைத் தயாரிப்பு, தோல், மருந்தாளுமை போன்ற பிரிவுகளும், இவை சார்ந்த தொழில்களும் தனிப்பட்ட பிரச்சினைகள் கொண்டவை என்று கூறினார். சுயசார்பு இந்தியா திட்ட முயற்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு தொழில்துறை அமைப்புகளை அவர் கேட்டுக்கொண்டார். இதன் மூலமாக இறக்குமதியை குறைத்து, தொழில்துறை தயாரிப்புச் செயல்பாடுகள் உற்பத்தி ஆகியவற்றை அதிகரிக்கச் செய்து, நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாடு முழுவதும் குறிப்பாக கிராமப்புற, பழங்குடியினப் பகுதிகளில் தொழில்துறை தொகுப்புகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம் என்று கட்காரி கூறினார். சிறு தொழில் முனைவோர்களுக்கும், வியாபாரிகளுக்கும், கடை உரிமையாளர்களுக்கும், 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குவதற்காக நுண் கடன் அமைப்பு பற்றிய கொள்கை இறுதியாக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

 



Tags : entrepreneurs ,traders ,Small Business ,Nitin Gadkari , Nitin Gadkari, Small Business
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...