கொரோனா பரவலை தடுக்க உப்பை கிருமி நாசினி போன்று பயன்படுத்தும் மக்கள்!: போதிய உற்பத்தி இல்லாததால் விலை 2 மடங்கு உயர்வு..!!

தூத்துக்குடி: கொரோனா பரவலை தடுக்க பெரும்பாலானோர் கல் உப்பை கிருமி நாசினி போன்று பயன்படுத்துவதால் அதன் தேவை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. இதனால் உப்பு விலையும் இருமடங்காகியுள்ளது. ஒரு டன் உப்பின் விலை 800 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 1600 ரூபாயாக உயர்ந்துள்ளது. தூத்துக்குடியில் கல் உப்பு, சிறுமணி உப்பு, சீனி தன்மையுடைய தூள் உப்பு ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. தினந்தோறும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உப்பை கிருமி நாசினியாக மக்கள் வாங்கி பயன்படுத்துவதால் உப்பின் தேவை அதிகரித்து வருகிறது. மேலும் வாய் கொப்பளித்தல், காய்கறிகளை கழுவுதல், ஆவி பிடித்தல் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுவதால் கல் உப்பின் மதிப்பு உயர்ந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 60 சதவீத அளவிற்கு மட்டுமே உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஒரு டன் உப்பின் விலை 800 ரூபாயில் இருந்து 1600 ரூபாயாக உயர்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில், கடலோரத்தை ஒட்டியுள்ள 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் உப்பு உற்பத்தியின் மூலமாக ஆண்டுக்கு 22 லட்சம் டன் உப்பு விளைவிக்கப்படுகிறது. இத்தொழியில் நேரடியாக 50,000 தொழிலாளர்களும், மறைமுகமாக 25,000 தொழிலாளர்களும், முறைசாரா உப்பு உற்பத்தி தொழிலை நம்பி 15,000 குடும்பங்களும் உள்ளன.

Related Stories: