×

ஜெயலலிதா, எம்ஜிஆர் சாதனைகளை எடுத்து கூறி தேர்தலை சந்திப்போம் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி!!

பெரம்பூர் : சென்னை திருவிக நகர் 6வது மண்டலத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில், வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு களப்பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர், நிருபர்களை சந்தித்து அமைச்சர் கூறியதாவது:சென்னையில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியில் அமர்த்தி தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டதால் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. தமிழகம் முழுவதும் பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரீஸால் தமிழர்களுக்கு பெருமை கிடைத்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்கவே ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கொரோனாவை தடுக்கும் விதமாக விநாயகர் சிலைகளை வீடுகளில் வைத்து வழிபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ஊரடங்கில் படிப்படியாக தளர்வு அறிவிக்கப்படும். அதிமுகவின் 5 ஆண்டு சாதனைகள் மட்டுமின்றி  ஜெயலலிதா, எம்ஜிஆர் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி  வரும் சட்டமன்ற தேர்தலை சந்திப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Jayalalithaa ,RP Udayakumar ,election , Jayalalithaa, we will meet the election claiming the achievements of MGR: Minister RP Udayakumar confirmed !!
× RELATED நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு,...