×

ஆன்லைன் மருந்து விற்பனையை தொடங்குகிறது பிரபல இகாமர்ஸ் நிறுவனமான அமேசான்

பெங்களூரு: அமேசான் நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக ஆன்லைன் மருந்து விற்பனையை தொடங்க உள்ளது. கொரோனா காலத்தில் வயதானவர்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுவதால், அவர்கள் குறிப்பிட்ட ஆன்லைன் ஆப்கள் மூலமாக மருத்துவர்களை தொடர்புக்கொண்டு ஆலோசனைகளை பெறுகின்றனர். அதேநேரத்தில் சில மருந்தகங்கள், வாடிக்கையாளர்களுக்கு மருந்துகளையும் ஹோம் டெலிவரி செய்து வருகின்றன.

இந்நிலையில் பிரபல இகாமர்ஸ் நிறுவனமான அமேசான், மருந்து விற்பனையை தொடங்குகிறது. ‛அமேசான் பார்மசி என்ற சேவை, மருந்துகள், அடிப்படை சுகாதார சாதனங்கள் மற்றும் பாரம்பரிய இந்திய மூலிகை மருந்துகளை வழங்கவுள்ளன. முதல்கட்டமாக பெங்களூரில் மட்டும் இந்த சேவையை தொடங்கியுள்ள அமேசான், விரைவில் மற்ற நகரங்களிலும் இதனை விரிவுப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. மருத்துவர் பரிந்துரைத்த மருந்து சீட்டில் உள்ள மருந்துகளை ஆர்டர் செய்தால் அங்கீகரிக்கப்பட்ட மருந்தகங்களில் இருந்து பெற்று விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.



Tags : Amazon , Amazon, online drug sales
× RELATED அமேசான் காடுகளில் சட்டவிரோதமாகச்...