×

கம்பம் சிக்னல் அருகே 6 மாதமாக மூடப்படாத பள்ளத்தால் ஆபத்து

கம்பம்: கம்பம் சிக்னல் அருகே கடந்த 6 மாதத்திற்கு மேலாக சாக்கடை பள்ளம் மூடப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. கம்பம் ஓடைக்கரை தெருவில் கடந்த 6 மாதத்திற்கு முன் புதிய தார்ச்சாலை மற்றும் சாக்கடை அமைக்கப்பட்டது. அப்போது போக்குவரத்து போலீசாருக்கு ஒதுக்கிய நிழற்குடை அருகே சாக்கடையை மூடப்படாமல் நகராட்சி ஊழியர்கள் விட்டுச் சென்றனர் ஆனால் தற்சமயம் 6 மாதங்களுக்கு மேலாகியும் சாக்கடை மூடாமல் திறந்த வெளியில் உள்ளது.

ஏற்கனவே ஓடைக்கரை தெரு மிக குறுகலான அதிக மக்கள் நடமாட கூடிய தெருவாகும்.இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாமலும் மழை தொடர்ந்து பெய்து வருவதாலும் அப்பகுதியில் வாகனம் ஓட்டி வருபவர்கள் பள்ளத்தில் இறக்கினால் விபத்து அபாயம் ஏற்படும் ஆபத்து உள்ளது. இதனால் உயிர்பலி ஏற்படும் நிலையும் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,`` 6 மாதத்துக்கு மேலாக சாக்கடை பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்தால் உயிர்பலி ஏற்படும்.நகராட்சி நிர்வாகம் துரித எடுக்க வேண்டும்’’ என்று கூறினர்.

Tags : pit , Danger ,not been closed, 6 months , pole signal
× RELATED திருமயம் குழிபிறையில் உள்ள இந்தியன்...