×

பரமக்குடியின் அருமைக் கலைஞன்...‘கலையாக் கலையே கமல்’ : திரைப் பயணத்தில் 60 ஆண்டுகளை நிறைவு செய்த கமல்ஹாசனுக்கு வைரமுத்து வாழ்த்து!!

சென்னை : த்து வைத்துள்ளதையொட்டி, கவிஞர் வைரமுத்து தனது பாணியில் ஒரு கவிதையாகவே கமலுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, உலக நாயகனாக உயர்ந்த கமல்ஹாசன், தனது திரைப்பயணத்தில் 60 ஆண்டுகளை நிறைவு செய்து, 61வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதையொட்டி பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது பாணியில் ஒரு கவிதையாகவே கமலுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

பரமக்குடியின்
அருமைக் கலைஞன்
பிறப்பு சிவப்பு;
இருப்பு கறுப்பு.
மரபுகடந்த புதுக்கவிதை
புரிதல் கடிது;
புரிந்தால் இனிது.
ஆண்டுகள் அறுபது
காய்த்த பின்னும்
நனிகனி குலுங்கும் தனிவிருட்சம்.
கலைத்தாய் தன் நெற்றியில்
மாற்றி மாற்றிச் சூடுவது
திலகத்தையும் இவர் பெயரையும்
‘கலையாக் கலையே கமல்’

எனக் குறிப்பிட்டுள்ளார்

Tags : artist ,Kamal Haasan ,Paramakudi ,Kalaiyak Kalaiye Kamal ,Vairamuthu , Paramakudi's wonderful artist ... ‘Kalaiyak Kalaiye Kamal’: Vairamuthu congratulates Kamal Haasan who has completed 60 years in screen travel !!
× RELATED 'பெரியாருக்கு முன்', 'பெரியாருக்குப்...