×

பெரும்பாறை சாலையில் மிரட்டும் பாறைகள்: அகற்றப்படுமா?

பட்டிவீரன்பட்டி: பெரும்பாறை மலைச்சாலையில் ஆபத்தாக சரியும் நிலையில் உள்ள பாறைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சித்தரேவு- பெரும்பாறை மலைச்சாலை 15 கிமீ தூரம் கொண்டதாகும். ஆபத்தான பள்ளத்தாக்குகளும், வளைவுகளும் நிறைந்த இந்த குறுகிய சாலையில்தான் தினந்தோறும் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள 20க்கும் மேற்பட்ட மலையடிவார கிராமங்களை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள், மலைப்பகுதியில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் என பலர் டூவீலர், கார், ஆட்டோ, லாரி போன்ற வாகனங்களில் சென்று வருகின்றனர். தவிர வத்தலக்குண்டுவில் இருந்து கொடைக்கானல் செல்லும் ரோடு மழைக்காலத்தில் துண்டிக்கப்பட்டால் மாற்று வழித்தடமாக சித்தரேவு- பெரும்பாறை வழியாக பண்ணைக்காடு சென்று அங்கிருந்து கொடைக்கானல் செல்லலாம். மேலும் இச்சாலை 40க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களை இணைக்கும் முக்கிய ரோடாகும்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையை அகலப்படுத்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று கடந்த ஆண்டு சித்தரேவு- புல்லாவெளி இடையே உள்ள 12 கிமீ தூரமுள்ள சாலையை ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை மூலம் 1 மீட்டர் அகலப்படுத்தி 2 பெரிய பாலங்கள் மற்றும் 33 சிறிய பாலங்கள் என ரூ.6 கோடியே 50 லட்சம் செலவில் சீரமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. ஆரம்பத்தில் வேகமாக நடந்து வந்த பணிகள் தற்போது மந்தமாக ஆமைவேகத்தில் நடந்து வருகிறது. என பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மலைச்சாலையில் 3 மிக பெரிய பாறைகள் ஆபத்தாக சரியும் நிலையில் உள்ளன. தற்போது பொது போக்குவரத்து இல்லாத காரணத்தினால் வாகனஓட்டிகளை அச்சுறுத்தும் இந்த 3 ராட்சத பாறைகளை அகற்ற மாநில நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.   


Tags : Great Rock Road ,road , Intimidating rocks, main road, removed?
× RELATED மலைச்சாலையில் சரியும் நிலையில் ராட்சத பாறைகள்: அதிகாரிகள் கவனிப்பார்களா?