×

திருவில்லிபுத்தூரில் மழையைக் காணோம் மேய்ச்சல் நிலமாகும் குளங்கள்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் நகரில் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளம் உள்ளது. அதன் அருகில் விருதுநகர் மாவட்டத்தின் மிகப் பெரிய கண்மாயான பெரியகுளம் கண்மாய் உள்ளது. அதேபோல் மடவார்வளாகம் பகுதியில் வைத்தியநாத சுவாமி கோயிலில் புதிய மற்றும் பழைய குளங்கள் உள்ளன. தொடர்மழையின்மை காரணமாகவும், கொளுத்தும் வெயில் காரணமாகவும் திருமுக்குளம், பெரியகுளம் கண்மாய் மற்றும் வைத்தியநாத சாமி கோயில் புதிய மற்றும் பழைய குளங்களில் தண்ணீர் இல்லை.
பெரியகுளம் கண்மாயில் சிறிதளவு தண்ணீர் உள்ளது.

வைத்தியநாத சாமி கோயில் பழையகுளத்தில் மிகவும் குறைவான அளவில் தண்ணீர் உள்ளது. ஆனால், தண்ணீர் இல்லாத  குளம் மற்றும் கண்களில் தற்போது திருவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள கால்நடைகள் மற்றும் ஆடு மாடுகள் மேய்ந்து வருகின்றன. தண்ணீர் இல்லாத காரணத்தால் கண்மாய்கள், குளங்கள் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது பொது மக்களையும், விவசாயிகளையும் கவலையடைய செய்துள்ளது.  


Tags : Srivilliputhur , We , rain , Srivilliputhur
× RELATED திருப்பூர் ஆண்டிபாளையம் குளம் மழையால் நிரம்பி வழிகிறது