×

இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகம் இடையே வரலாற்று சிறப்புமிக்க உடன்பாடு எட்டப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்..!!

வாஷிங்டன்: இஸ்ரேலும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே சுமூக உறவுகளை பேணுவதற்கான வரலாற்று சிறப்புமிக்க உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். புதிய உடன்பாட்டை தொடர்ந்து, இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் உயர்நிலை பிரதிநிதிகள் வெள்ளை மாளிகையில் சந்திக்கும் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அப்போது முதலீட்டுத்துறை, சுற்றுலா, சுகாதாரம், கலாச்சாரம், சுற்றுச்சூழல், பரஸ்பரம் தூதரகங்கள் அமைத்தல் போன்றவை தொடர்பாக இருதரப்பும் முறைப்படி ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளதாவது, இது சாத்தியம் இல்லை என்று அனைவரும் கூறினார்கள். 49 ஆண்டுகளுக்கு பின்னர் இஸ்ரேல், அரபு நாடுகள் இடையே முழுமையான தூதரக ரீதியிலான புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. தூதர்கள், தூதரகங்களை இருநாடுகளும் பரஸ்பரம் தொடங்கி அதன் மூலம் எல்லை பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நிலை ஏற்பட்டுள்ளது,என குறிப்பிட்டார். 1948ம் ஆண்டில் இஸ்ரேல் சுதந்திரம் அறிவிக்கப்பட்ட பிறகு இஸ்ரேல் - அரபு நாடுகளிடையே மேற்கொள்ளப்படும் 3வது உடன்பாடு இதுவாகும்.

இது தொடர்பாக டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடான்யாஹூ, அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத் ஆகியோர் தொலைபேசி வழியாக உரையாடியதை தொடர்ந்து உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. பின்னர் மூன்று தலைவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், இந்த வரலாற்றுப்பூர்வ திருப்பம் மத்திய கிழக்கில் அமைதியை மேம்படுத்தும் என்று கூறியுள்ளனர். இது ராஜ்யத்திற்கும், பிராந்தியத்திற்குமான வெற்றி என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர். சுதந்திரத்திற்கு பிறகு எகிப்துடன் 1979ம் ஆண்டிலும் அதன் பிறகு 1994ம் ஆண்டில் ஜோதிடானுடனும் இஸ்ரேல் இதுபோன்ற அமைதி ஒப்பந்தந்தை மேற்கொண்டது.

Tags : Trump ,United Arab Emirates ,US ,Israel , US President Trump has announced that a historic agreement has been reached between Israel and the United Arab Emirates .. !!
× RELATED இஸ்ரேல் - அமீரகம் - பஹ்ரைன் இடையே அமைதி...