இந்திய வரலாற்றில் காங்கிரஸ் சாராத கட்சியின் நீண்டகாலம் பிரதமராக இருந்தவர்களில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்து சாதனை!!

டெல்லி : இந்தியாவில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர்களில் 4-வது இடத்தை பிரதமர் மோடி பிடித்துள்ளார். காங்கிரஸ் அல்லாத பிரதமர்களில் நீண்டகாலம் காலம் பிரதமராக இருந்தவர்களில் முதலிடத்தையும் பிரதமர் நரேந்திர மோடி பிடித்து சாதனை படைத்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று பிரதமராக மோடி பொறுப்பேற்றார். 5 ஆண்டுகளை நிறைவு செய்து 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 303 எம்.பி.க்களுடன் 2-வது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்றார்.

இந்தியாவில் நீண்டகாலம் பிரதமராக இருந்தவர்களில் காங்கிரஸ் முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு(6,130நாட்கள்), இந்திரா காந்தி(5,829நாட்கள்), மன்மோகன் சிங்(3,656) பதவியில் இருந்தனர். அந்த வரிசையில் பிரதமர் மோடி 2,269 நாட்களுடன் 4ம் இடத்தில் உள்ளார். மேலும் காங்கிரஸ் அல்லாத பிரதமர்களில் நீண்டகாலம் காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையையும் மோடி பெற்றுள்ளார். முன்னதாக மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மட்டுமே நீண்டகாலம் காங்கிரஸ் அல்லாத பிரதமராக இருந்தவர் என்ற சாதனையை வைத்திருந்தார். வாஜ்பாய் 2,22682 நாட்கள் தொடர்ச்சியாக பிரதமராக இருந்தார், அவரின் சாதனையை பிரதமர் மோடி நேற்று முறியடித்தார்.

இது தொடர்பாக பாஜகவின் தகவல் தொழில்நுட்பப்பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இந்திய வரலாற்றில் நீண்டகாலம் பிரதமராக இருந்தவர்களில் 4-வது இடத்தைப் பிரதமர் மோடி பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் அல்லாத கட்சியிலிருந்து நீண்டகாலம் பிரதமராக இருந்தவர் எனும் பெருமையையும் மோடி பெற்றுள்ளார். வாஜ்பாய் 2,268 நாட்கள் பிரதமராக இருந்தார். இன்று அந்த சாதனையையும் மோடி முறியடித்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: