×

மருந்து சீட்டில் மருந்து பெயரை தெளிவாக பெரிய எழுத்தில் எழுத வேண்டும்: டாக்டர்களுக்கு ஒடிசா உயர் நீதிமன்றம் உத்தரவு!!

புவனேஷ்வர் : பெரும்பாலான மருத்துவரின் கையெழுத்து கிறுக்கலாக இருக்கும் என்று தெரிவித்து இருக்கும் ஒடிசா உயர்நீதிமன்றம், மருந்து பெயரை பெரிய எழுத்தில் எழுத வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. மருத்துவர்களின் கையெழுத்து கிறுக்கலாக உள்ளது என்று பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணா படா மண்டல் என்பவர் ஒடிசா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், எனது மனைவியை சிகிச்சைக்காக டாக்டரிடம் அழைத்துச் சென்றேன். அவர் ஆங்கிலத்தில் எழுதி கொடுத்த மருந்துகளின் பெயர்கள் தெளிவாக இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பனிகிராகி தலைமையிலான அமர்வு, மருந்துச் சீட்டு, பிரேத பரிசோதனை அறிக்கை, காயங்கள் குறித்த பரிசோதனை அறிக்கை உள்ளிட்டவற்றை மருத்துவர்கள் தெளிவான கையெழுத்தில் எழுத வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். குறிப்பாக நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருந்துகளின் பெயர்களை தெளிவான கையெழுத்தில் பெரிய எழுத்தில் எழுத வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக ஒடிசா தலைமைச் செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது தொடர்பாக மாநில அரசு மருத்துவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று ஒடிசா நீதிமன்றத்தின் உத்தரவாகும். மேலும் இது டிஜிட்டல் உலகம் என்று தெரிவித்த நீதிபதிகள், எலெக்ட்ரானிக் சாதனங்கள் வாயிலாக மருந்துகளின் தெளிவான அச்சுப் பிரதியை நோயாளிகளுக்கு வழங்கலாம் என்று கூறியுள்ளனர். 


Tags : Orissa High Court ,doctors , Prescription, Prescription, Doctors, Odisha, High Court, Order
× RELATED சத்தியமா என் பெயர் கொரோனா தாங்கோ......