கொரோனா நோயாளி குணமடையாத நிலையில் டிஸ்சார்ஜ்!: கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நேரிட்ட கொடுமை..!!

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் முழுமையாக குணமடையாத நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கொரோனா நோயாளி மூச்சுத்திணறலால் அவதிப்பட எந்தவொரு மருத்துவமனையும் அனுமதிக்காமல் அலைக்கழித்து கொடூரம் அரங்கேறியுள்ளது. கோவை கிருஷ்ணா நகரை சேர்ந்த 57 வயது பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நோய் தொற்று குணமாகாத நிலையில், வீட்டிற்கு அனுப்பிவிட்டனர்.

அடுத்த ஒருமணி நேரத்திலேயே அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மீண்டும் அந்த மருத்துவமனைக்கு சென்ற போது சிகிச்சைக்கு சேர்க்க மறுத்ததாக கூறப்படுகிறது. இரவு 7 மணிக்கு வந்த அவரை, 4 மணி நேரம் காக்க வைத்துள்ளனர். இதன் பின்னர் கோவை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அவருடைய உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர். அங்கும் அவரை சேர்க்காமல் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு செல்லுமாறு திருப்பி அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக போலீசில் புகார் கூறியதை அடுத்து, விடியற்காலை 4 மணியளவில் மீண்டும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். முழுமையாக குணமடையாத கொரோனா நோயாளியை இ.எஸ்.ஐ. மருத்துவமனை டிஸ்சார்ஜ் செய்ததுடன் மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவரை எந்தவொரு மருத்துவமனையும் சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் சுமார் 9 மணி நேரம் பெண் நோயாளி அலைக்கழிக்கப்பட்டதால் அவதிப்பட்டுள்ளார்.

Related Stories: