×

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24.61 லட்சத்தை கடந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 17.51 லட்சத்தை தாண்டியது

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24.61 லட்சத்தை கடந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 17.51  லட்சத்தை தாண்டியது. நாட்டில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 64,553 பேர் கொரோனா  நோய் தொற்றின் காரணமாக புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த  எண்ணிக்கையானது 24,61,190 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,61,595 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 17,51,555 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் மேலும் 942 உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 47,033 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 70.77% ஆக உயர்ந்துள்ள  நிலையில், இறப்பு விகிதம் 1.96% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்கள் விகிதம் 27.27% ஆக குறைந்துள்ளது.

மாநிலங்கள் வாரியான விவரம்!!

*மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 560,126 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 19,063 பேர் மரணம் அடைந்துள்ளனர். குணமடைந்து மொத்தம் 3,90,958 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

*தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,20,355 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு மொத்தம் 5,397 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று வரை குணமடைந்து மொத்தம் 2,61,459 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

*டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,49,460 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு மொத்தம் மொத்தம் 4,167 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  குணமடைந்து மொத்தம்  1,34,318 பேர்  குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.


Tags : India , incidence of corona crossed 24.61 lakh,number of cured , 17.51 lakh
× RELATED தொற்று பாதிப்பு 54 லட்சத்தை தாண்டியது