இரண்டாம் நிலை காவலர் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: அரசுக்கு எல்.முருகன் வேண்டுகோள்

சென்னை: “இரண்டாம் நிலை காவலர் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்” என்று தமிழக அரசுக்கு எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கை: 2019ல் நடந்த இரண்டாம் காவலர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில், தேர்ச்சி பெற்று, உடற்தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்று 20,000ம் பேரில், மதிப்பெண்கள் அடிப்படையில் 8538 பேருக்கு மட்டுமே பணி நியமனம் கிடைத்துள்ளது.

இப்போதைய கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணிகளுக்கு கூடுதலாக காவலர்கள் தேவை உள்ளது.

தமிழக அரசும் புதிதாக 10,000க்கு மேற்பட்ட காவலர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு பணிக்களுக்கிடையே மீண்டும் புதிதாக காவலர் தேர்வுக்கான பணிகளை நடைமுறைப்படுத்துவது மிக சிரமமான ஒன்றாகும். அதே வேளையில் ஏற்கனவே காவலர் தேர்வில் பரீட்சை மற்றும் உடற்தகுதியில் தேர்ச்சி பெற்ற 11,462  பேர் பணி நியமனம் பெற முடியாத வகையில் உள்ளனர். அவர்களும் தங்களுக்கு காவலர் பணி வழங்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர். அவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு பரீசீலிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>