ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 4 பேர் கைது

திருத்தணி: ரேஷன் அரிசியைஆந்திராவுக்கு கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலத்திற்கு திருத்தணி வழியாக ரேஷன் அரிசி  கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்பி அரவிந்தனுக்கு புகார் சென்றது. அவர் திருவள்ளூர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அவர் உத்தரவின் பேரில் திருத்தணி நாகலாபுரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்  அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கி சோதனை செய்தனர். ஆட்டோவில் ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசி கடத்திய ஆட்டோ டிரைவர் சுரேஷ் (40), திருத்தணி பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் (24), வெங்கடேசன் (30) உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>