×

காதலிப்பதை எதிர்ப்பதால் ஆத்திரம் இளம்பெண்ணின் தந்தை சரமாரி வெட்டி கொலை: 3 பேருக்கு வலை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் காசி. இவரது மகன் தணிகைமணி (42). செங்கல்பட்டில் உள்ள  தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி காயத்திரி. இவர்களுக்கு கீர்த்திகா என்ற மகளும், ஒரு மகனும்  உள்ளனர். கீர்த்திகா கல்லூரியில் படிக்கிறார். படாளம் அடுத்த வடபாதியை சேர்ந்தவர் சிலம்பு (20). அதே பகுதியை சேர்ந்த விஜி என்பவரது கறிக்கடையில் வேலை செய்கிறார். கடந்த சில மாதங்களாக சிலம்பு, கீர்த்திகாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இதையொட்டி அவர், தினமும் கீர்த்திகாவை பின் தொடர்ந்து சென்று, தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்தார். இதனை, தனது தந்தை தணிகைமணியிடம் கூறி கீர்த்திகா அழுதுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த தணிகைமணி, கடந்த சில நாட்களுக்கு முன் சிலம்பை சந்தித்து, தனது மகளிடம் ஏன் தகராறு  செய்கிறாய் என கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில், சிலம்புவின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால், அவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து சிலம்பு, தனது நண்பர்களான விஜி, அக்கு ஆகியோருடன் சேர்ந்து தணிகைமணியை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினார். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் தணிகைமணி, செங்கல்பட்டில் இருந்து பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

இருங்குன்றபள்ளி அருகே சென்றபோது, அங்கு மறைந்திருந்த 3 பேரும், அவரை மறித்து, கறி வெட்டும் கத்தியால் தணிகைமணியை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த அவர், ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனே அவர்கள், அங்கிருந்து தப்பிவிட்டனர். தகவலறிந்து செங்கல்பட்டு தாலூகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ரத்த வெள்ளததில் உயிருக்கு போராடி கொண்டிருந்த தணிகைமணியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு  சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சிலம்பு உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Resisting love, rage, teen, father volley cut, murder, web for 3 people
× RELATED வார்த்தையில் சொல்லக்கூடியதா...