×

சிறப்பு மீட்பு விமானத்தில் தங்கம் கடத்தியவர் கைது

சென்னை: கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூரில் தவித்த 137 பேர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீட்பு விமானத்தில் நேற்று முன்தினம் அதிகாலை சென்னை வந்தனர். அதில் வந்த பயணிகளை சுங்க துறையினர் சோதனையிட்டபோது, திருச்சியை சேர்ந்த ஒருவரின் பையில் பிளாஸ்டிக் குழாய்களை அறுக்க பயன்படுத்தும் ஆங்கிள் கிரைண்டர் இருந்தது. சந்தேகத்தின்பேரில் அதை கழற்றி பார்த்தபோது, அதற்குள் 378 கிராம் தங்கக்கட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. சர்வதேச மதிப்பு ரூ.21 லட்சம். அதை பறிமுதல் செய்து, அவரை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.


Tags : smuggler , Special, rescue plane, gold smuggler, arrested
× RELATED போதை பொருட்கள் கடத்தியவர் சிக்கினார்