முகநூலில் மாணவி படம் வெளியிட்டு அவதூறு வாலிபர் கைது

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த ஒரகடம் காந்தி நகரை சேர்ந்தவர் மகாதேவன் (25). இவரும், அதே பகுதியை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் மகாதேவனிடம் பேசுவதை மாணவி தவிர்த்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மகாதேவன் காதலியை பழிவாங்கும் நோக்கில், முகநூலில் போலி கணக்கு தொடங்கி அதில் மாணவியின் புகைப்படத்துடன் செல்போன் நம்பரை குறிப்பிட்டு அவதூறாக பதிவு செய்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி, இதுபற்றி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகாதேவனை நேற்று கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>