×

வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிக்கு செல்ல மாற்றுச்சான்றிதழ் காண்பித்தால் அனுமதி: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

கோபி: ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி:  
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1, 6, 9ம் வகுப்புகளுக்கு வரும் 17ம் தேதி மாணவர் சேர்க்கை நடைபெறும். 10ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை 24ம் தேதி நடைபெறும். கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி திறப்பு தற்போதைக்கு கிடையாது.  மாணவர்கள் இ-பாஸ் பெறும் முறை குறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும். தற்காலிகமாக, மாணவர்கள் வேறு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல மாற்றுச்சான்றிதழை காண்பித்தால் போதும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வழங்கியதில் குளறுபடி நடந்துள்ளதாக 17 மாணவர்கள் புகார் கூறி உள்ளனர். அரசு பள்ளியில் குளறுபடி ஏற்படவில்லை என்றார்.


Tags : district school ,Minister , To go to another district school, college, Alternative Certificate, Permission, Minister Senkottayan, Information
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...