உடுமலை சங்கர் ஆணவக் கொலை விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

சென்னை: உடுமலை சங்கர் கொலை வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என அவரது சகோதரர் விக்னேஷ்வரன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். உடுமலையை சார்ந்த சங்கர், கவுசல்யா இருவரும் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி உடுமலைப்பேட்டை பஸ் நிலையத்தில் பட்டப்பகலில் சங்கர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதில் கவுசல்யா உயிர் தப்பினார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, ஐகோர்ட்டில் மேல்முறையீ செய்யப்பட்டது.

அதை விசாரித்த ஐகோர்ட் ஜூன் 22ம் தேதி இந்த வழக்கின் முதல் குற்றவாளியான சின்னசாமியை விடுதலை செய்தது. ஜெகதீசன், பழனி, எம்.மணிகண்டன் , பி.செல்வக்குமார், தமிழ், மதன் ஆகிய ஐந்து பேரின் தூக்கு தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்றியது. கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்பட 3 பேரின் விடுதலை என்ற முந்தைய உத்தரவை உறுதி செய்தது. இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக இறந்த சங்கர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,”உடுமலை ஆணவக் கொலை வழக்கு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேற்கண்ட மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: