கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 27 பேருக்கு முதல்வரின் சிறப்பு விருது: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக  பணியாற்றிய 27 பேருக்கு முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சுதந்திர தினத்தையொட்டி கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் பல்வேறு துறைகளில் முன்கள பணியாளர்களாக சிறப்பாக பணியாற்றிய 27 பேருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கிறார். அதன்படி, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டாக்டர் ராஜேந்திரன், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் உமா மகேஸ்வரி, அரும்பாக்கம் அரசினர் சித்த மருத்துவ கல்லூரி விரிவுரையாளர் சதீஷ்குமார், ஓமந்தூரர் அரசு மருத்துவக்கல்லூரி செவிலியர் ராமுதாய்,

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை செவிலியர் கிரேஸ் எமைமா, கோவை ஈஸ்ஐ மருத்துவ கல்லூரி செவிலியர் ஆதிலட்சுமி, பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் எஸ்.ராஜூ, கோவை சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார், பழனி சுகாதார பகுதி மாவட்டம் ஆய்வக வல்லுனர் ஜீவராஜ், மணப்பாறை காவல் நிலைய காவலர் சையித் அப்தாகீர், அனந்தபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் நரசிம்ம ஜோதி, தலைமை செயலக காலனி காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி,

நாகர்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வீரர் துரை ராபின், துறையூர் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய வீரர் பழனிசாமி, மணலி தீயணைப்பு நிலைய வீரர் கருணாநிதி, மாமல்லபுரம் துப்புரவு ஆய்வாளர் ரகுபதி,

கொடைக்கானல் துப்புரவு ஆய்வாளர் பாண்டிச்செல்வம், சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் கலையரசன், நாரவாரிகுப்பம் பேரூராட்சி தூய்மை பணியாளர் ஏசுதாஸ், சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர் ஜெய்சங்கம், ஈரோடு மாநகராட்சி தூய்மை பணியாளர் மா.சங்கர், குன்றத்தூர் வட்டாட்சியர் ஜெயசித்ரா, மேட்டூர் துணை வட்டாட்சியர் ஜெயந்தி, கஞ்சநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பிரத்விராஜ், மயிலாப்பூர் ரேஷன் கடை பட்டியல் எழுத்தர் தியாகமூர்த்தி, தாம்பரம் மேற்கு பார்வதி நகர் ரேஷன் கடை விற்பனையாளர் ரமாமணி, காஞ்சிபுரம் மாவட்டம் விப்பேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சஙகம் விற்பனையாளர் தமிழ்செல்வன் ஆகிய 27 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது என்று தமிழக அரசின் பொதுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: