×

ஐ-லீக்கில் மேலும் 2 அணிகள்

இந்திய கால்பந்து கிளப்களுக்கு இடையிலான ஐ-லீக் போட்டியில் இதுவரை 11 அணிகள் விளையாடி வந்தன. நடப்பு சாம்பியனான மோகன் பகான் இப்போது ஐஎஸ்எல் அணியான ஏடிகேவுடன் இணைந்து விட்டது. அதனால் மோகன் பகான் இனி ஐ-லீக் தொடரில் விளையாடாது. இந்நிலையில் மற்ற நகரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஐ லீக்கில் அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்தது. அதற்கான ஏலம் விடப்பட்ட நிலையில், டெல்லி சார்பில் சுதேவா எப்சி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த 2020-21ம் ஆண்டுக்கான தொடரில் வழக்கம் போல் 11 அணிகள் விளையாடும். அதுமட்டுமின்றி ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து ஸ்ரீநிதி எப்சி என இன்னொரு புதிய அணியும் இணைய உள்ளது. இந்த அணி 2021-22 சீசனில் இருந்து களம் காணும்.

Tags : teams ,I-League , I-League, 2 more teams
× RELATED ஐபிஎல் அணிகளுக்கு இந்திய...