×

நீச்சல் பயிற்சியாளர்களுக்கு உதவி

சென்னை: கொரோனா பரவலால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நீச்சல் பயிற்சியாளர்கள், உதவியாளர்களுக்கு நீச்சல் சங்கம் சார்பில் நிதி, மளிகை பொருட்கள் உதவியாக வழங்கப்பட்டன. மெட்ராஸ் மாவட்ட நீச்சல் சங்கம் சார்பில் நீச்சல் பயிற்சியாளர்கள், உதவியாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் ரொக்கம், 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த உதவியின் மூலம் மொத்தம் 75 பேர் பயனடைந்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள் சடையவேல் கைலாசம், ஸ்ருதி ராகுல், ரச்சனா ஆகியோர் செய்திருந்தனர்.


Tags : coaches ,swimming coaches , Swimming, for coaches, help
× RELATED தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப்பட்ட உழவர் உதவி நிதி ரூ.47 கோடி மீட்பு