×

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் அரை இறுதியில் பிஎஸ்ஜி

லிஸ்பன்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் த்ரில் வெற்றி பெற்ற பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. லிஸ்பன் நகரில் (போர்ச்சுகல்) நேற்று நடந்த முதல் காலிறுதியில் இத்தாலியின் அட்லான்டா எப்சி, பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணிகள் மோதின. 29வது நிமிடத்தில் சக வீரர் ஜபாடா தட்டித் தந்த பந்தை மரியோ பசிலிக் தவறாமல் கோலாக்கி அசத்த அட்லான்டா 1-0 என முன்னிலை பெற்றது. பிஎஸ்ஜி கடுமையாக முயற்சித்தும் பதில் கோலடிக்க முடியாமல் திணறியதால் அட்லான்டா அரையிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆட்டத்தின் கடைசி நிமிடம் (90) திடீர் திருப்பம் ஏற்பட்டது. பிஎஸ்ஜி நட்சத்திர வீரர் நெய்மர் (பிரேசில்) தொலைவில் இருந்து அடித்த பந்தை கோல் பகுதியில் நின்ற  மார்க்யூனோஸ் எளிதாக தட்டி விட கோலானது. 1-1 என சமநிலை ஏற்பட்ட நிலையில், காயம் உள்ளிட்ட தாமதம் காரணமாக வழங்கப்படும் கூடுதல் நேரத்தில் பிஎஸ்ஜி வீரர் எம்பாப்பே  உதவியுடன் சவுபோ மோடிங் (90+3’)  கோல் அடித்து அசத்தினார். பிஎஸ்ஜி அணி 2-1 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றதுடன் அரையிறுதி போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.இன்று அதிகாலை நடைபெறும் 2வது காலிறுதியில் மோதும் லெய்ப்சிக்-அத்லெடிகோ மாட்ரிட் அணிகளில் வெற்றிபெறும் அணியுடன்  பிஎஸ்ஜி அரையிறுதியில் மோதும்.

Tags : European Champions League ,semi-finals ,PSG , European, Champions League, Semi-Final, PSG
× RELATED ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் 6ம் முறையாக...