கெடுபிடியை கைவிட்டார் டிரம்ப் எச்1பி விசாவில் திடீர் தளர்வு: இந்தியர்களுக்கு பலன் தரும்

வாஷிங்டன்: எச்1பி விசா வழங்குவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப், திடீரென பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளார். கொரொனா பரவல் காரணமாக அமெரிக்காவில் நிலைகுலைந்த வேலை வாய்ப்பின்மை, பொருளாதார நிலையை சரி செய்யும் நோக்கத்தோடு எச்1பி விசாவுக்கு அதிபர் டிரம்ப் கடந்த மாதம் 22ம் தேதி தடை விதித்தார். அமெரிக்க வேலைகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் எண்ணத்தில் கொண்டு வரப்பட்ட டிரம்பின் இந்த திட்டம், கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தது. இந்த தடையால் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.  

அதேநேரம்,அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், இந்த தடை விதிக்கப்பட்டதால் இந்தியர்களின் வாக்குகளை இழக்க வேண்டியிருக்கும் என்று ஆளும் குடியரசு எம்பி.க்களும் டிரம்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், எச்1பி விசா கட்டுப்பாடுகளில் டிரம்ப் நேற்று திடீரென சில தளர்வுகளை அறிவித்தார். அதன்படி, ஏற்கனவே வேலை பார்த்த நிறுவனத்தில், மீண்டும் அதே பதவி கிடைத்தால் மட்டுமே எச்.1பி விசா மூலம் அமெரிக்காவுக்குத் திரும்பலாம். எச்1பி விசா மூலம் அமெரிக்கா திரும்பும் நபர், தனது மனைவி, பெற்றோர், குழந்தைகளையும் அழைத்து வரலாம். இதேபோல், எல்1 விசாவுக்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: