சுதந்திர தினத்தை முன்னிட்டு 27 பேருக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிப்பு

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு 27 பேருக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க முன்களப் பணியாளர்களாக பணியாற்றிய மருத்துவ துறையை சேர்ந்த 9 பேருக்கு பதக்கம் வழங்கப்படுகிறது. டாக்டர்கள் ராஜேந்திரன், உமா மகேஸ்வரி, சதீஷ்குமாருக்கு பதக்கம் வழங்கப்படுகிறது.  செவிலியர்கள் ராமுத்தாய், கிரேஸ் எமைமா, சுகாதார துணை இயக்குனர் எஸ்.ராஜூ, சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார், ஆய்வக பணியாளர் ஜீவராஜ் ஆகியோருக்கும் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: