×

ரஷ்ய துணை பிரதமர் யூரி ட்ருட்னெவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!!

மாஸ்கோ: ரஷ்ய துணை பிரதமருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்ய துணை பிரதமர் யூரி ட்ருட்னெவ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ரஷ்யாவின் துணை பிரதமராக இருப்பவர் யூரி ட்ருட்னெவ்.  ரஷ்ய பிரதமர் மிகெய்ல் மிஷுஸ்டின் கிழக்கு பகுதிகளுக்கு மேற்கொள்ளும் பயணத்தின் ஒரு பகுதியாக ட்ருட்னெவும் அங்கு செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது.  

இந்த பயணத்திற்கு முன் ட்ருட்னெவுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த கொரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.  இதனால், அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,102 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால், அந்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,02,701 ஆக உயர்ந்து உள்ளது.  இதுவரை 15,231 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Yuri Trudeau ,Russian ,Yuri Trudnev , Russia, Deputy Prime Minister, Yuri Trudnev, Corona
× RELATED 10 கோடி ரஷ்ய தடுப்பூசியை இந்தியாவிடம் விற்க ஒப்பந்தம்