ஆந்திராவில் இன்று ஒரே நாளில் மேலும் 9,996 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..: மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,64,142 !

அமராவதி: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 9,996 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 9996 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,64,142 ஆக அதிகரித்துள்ளது. இதில் கிழக்கு கோதாவரியில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில், 1504 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், குண்டூர் மற்றும் கிழக்கு கோதாவரியில் தலா 10 பேர், அனந்தபூரில் 8 பேர், கடப்பாவில் 7 பேர், சித்தூர், கர்னூல், நெல்லூர், பிரகாசம், ஸ்ரீகாகுளம் மற்றும் விசாகப்பட்டினத்தில் தலா 6 பேர், விஜயநகரம் மற்றும் மேற்கு கோதாவரியில் தலா 5 பேர் மற்றும் கிருஷ்ணா மாவட்டத்தில் ஒருவர் என முறையே 82 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள, பலியானவர்களின் எண்ணிக்கை 2,378 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில், ஆந்திரா முழுவதும் இன்று ஒரேநாளில் 9,449 கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,70,924 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் தற்போது வரை 90,840 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திர மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.  

Related Stories:

>