கொரோனா ஊரடங்கு காலத்தில் நிலமை சீரடையும் காலம் வரை நெசவாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 வழங்குக : தமிழ் மாநில காங்கிரஸ்!!

சென்னை : கொரோனா ஊரடங்கு காலத்தில் நிலமை சீரடையும் காலம் வரை நெசவாளர்களுக்கு அரசு மாதந்தோறும் ரூ.5,000 உதவித் தொகை வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. ஜி.கே. வாசன் வலியுறுத்திஉள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியாவில் விவசாயத்திற்று அடுத்தப்படியாக மிகப் பெரிய தொழில் நெசவுத் தொழிலாகும். தமிழகத்தை பொருத்தமட்டில் 65 லட்சம் நெசவாளர்கள் உள்ளனர். இதில் 3.19 லட்சம் நெசவாளர்களை கொண்ட 1.89 லட்சம் கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் உள்ளன. கைத்தறி தொழிலில் பாரம்பரியம், மற்றும் நேர்த்தியான கைத்தறி நெசவு ஆகியவற்றின் அடிப்படையில், இந்தியாவிலேயே தமிழகம் முன்னனி மாநிலமாக திகழ்கிறது.இன்று இந்த மகத்தான, மகாத்மா காந்தியடிகள் நேசித்த, கைத்தறி நெசவுத் தொழில் நலிவுற்று இருக்கிறது. நெசவுத் தொழிலுக்குத் தேவையான மூலப் பொருள்கள், ஜரிகை, நூல், ஆகியவை பெரும்பாலும் வெளி மாநிலங்களில் இருந்துதான் வாங்கப்படுகின்றது.

கொரோனா நோய் தாக்கத்தின் காரணமாக, முழு ஊரடங்கு அறிவித்ததில் இருந்து இன்றுவரை மூலப் பொருள்களும் கிடைக்காமலும், அதனால் வேலை இல்லாமலும், ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பல ஆயிரம் கோடி மதிப்பிலான, வேஷ்டி , துண்டு, சேலைகளும், ஜமுக்காலம், மற்றும் கைத்தறி ஆடைகளும், விற்க முடியாமலும் நெசவாளர்கள் முடங்கியுள்ளனர்.தனியார் பட்டுத்தறி நெசவாளர்களின் நிலை மிகவும் மோசம். உற்பத்தி செய்த பொருள்களை விற்க முடியாமல் தேங்கியுள்ளதாலும், தன்னிடம் தொழில் செய்யும் வேலையாள்களுக்கு வேலை வழங்க முடியாமலும், வங்கியில் வாங்கிய கடனுக்க வட்டி கட்ட முடியாமலும் திணறுகின்றனர்.

அதோடு கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல் செய்யப்படும் பட்டுக்கைத்தறி சேலைகளுக்கு தேவைப்படும் கச்சாப் பட்டும், அசல் வெள்ளி ஜரிகையும், பாவு, சப்புரி, கடுமையாக விலை உயர்ந்துள்ளது. அவற்றிற்கு அரசு 30மூ சதவிகிதம் மானியம் அளிக்க வேண்டும். அப்படி அளித்தால் பட்டு புடவை, மற்றும் வேÔ¢டிகளின் விலை குறைக்கப்படும், அதனால் விற்பனை அதிகரித்து நெசவாள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கஷ்டங்கள் விலகும்.

நெசவாளர்கள் உற்பத்தி செய்த ஜவுளி பொருள்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். அதோடு தமிழகத்தில் உள்ள பட்டு கூட்டுறவு சங்கங்களில் தேங்கியுள்ள பட்டுப்புடவைகளுக்கு அரசு சிறப்பு தள்ளுப்படி செய்தால் விற்பனை அதிகரிக்கும். நெசவாளர்களின் வாழ்வும் செழிக்கும். கொரோனா தொற்று காலத்தில் நெசவாளர்களின் சிரமத்தை அரசு கவனத்தில் கொண்டு, அவர்களது நிலமை சீரடையும் வரை மாதம்தோறும் ரூ.5,000 உதவித் தொகை அளிக்க வேண்டும். அதோடு ஒட்டுமொத்த நெசவாளர்களின் வாழ்வாதாரம் செழிக்க தமிழக அரசு உரிய நடடிவக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்., இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: