கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கொரோனா நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்!!

பெங்களூரு: கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா இன்று வீடு திரும்பினார். கர்நாடக முன்னாள் முதல்வரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி கடந்த 4ம் தேதி பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு இருந்தார். அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் எடியூரப்பாவை அவர் சந்தித்து நலம் விசாரித்த பிறகு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

சித்தராமையாவின் மனைவி, மகனும் எம்எல்ஏவுமான டாக்டர் யதீந்திரா உள்பட குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கோவிட்-19 பரிசோதனை செய்துள்ளதுடன் தனிமைப்படுத்தப்பட்டனர். பெங்களூருவில் சித்தராமையாவுக்கு ஒதுக்கீடு செய்துள்ள அரசு இல்லம் மற்றும் மைசூருவில் உள்ள அவரது சொந்த வீடுகள் சானிடைஸ் செய்தபின் வரும் 18ம் தேதி வரை சீல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,கடந்த 2 நாள்களாக காயச்சல் குணடைந்து  சித்தராமையா நலமுடன் இருந்தாா். அதன்பிறகு புதன்கிழமை மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்றிலிருந்து அவா் குணமடைந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து வியாழக்கிழமை சித்தராமையா வீடு திரும்புவாா் என மணிபால் மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது. அதன்படி இன்று சித்தராமையா வீடு திரும்பினார். ஆயினும் அவர் 14 நாள்கள் வீட்டில் அவா் தனிமைப்படுத்திக் கொள்வாா்.

Related Stories:

>