×

கோவையில் காட்டு யானைகளின் இறப்புக்கு காரணம் என்ன?: 7 மாதத்தில் 17 யானைகள் பலி..!! நடமாடும் பேருயிரை காக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!!!

கோவை:  கோவையில் தொடர்ந்து அதிகரித்து வரும் காட்டுயானைகளின் உயிரிழப்பை தடுக்க அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த உலகத்தில், நமது காலத்தில் நிலத்தில் வாழும் ஒரே பேருயிர் யானை மட்டும்தான். யானை இல்லாத சோலைக்காடு, குடில்லாத வீட்டை போன்றது . தமிழ்நாட்டில் குறிப்பாக மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை மாவட்டத்தில் அண்மை காலமாக யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்து வருவது பல்வேறு கேள்விகளையும், ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு தொடர்ச்சிமலையின் மடியில் அமைந்துள்ள கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் கானகவாழ் உயிர் சூழல் மண்டலமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் முன்பு இல்லாத அளவிற்கு தற்போது காட்டுயானைகளின் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதாவது கடந்த 7 மாதங்களில் மட்டும் 17 யானைகள் இயற்க்கைக்கு முரணான வகையில் உயிரிழந்துள்ளன. மேலும் தெற்கு ஆப்ரிக்காவின் போஸ்ட்வானாவில் உள்ள ஒக்வான்கோ சதுப்பு நிலத்தில் 2 மாதங்களுக்கு முன்பு மிக பெரிய கொடூர சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

அதாவது போஸ்ட்வானாவில் ஒரே மாதத்தில் 300க்கும் மேற்பட்ட யானைகள் நீர் நிலைகள் அருகே மர்மமான முறையில் இறந்தது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிகழ்வுக்கு முன்னோட்டமாக கோவையில் கடந்த 7 மாதங்களில் 17 யானைகள் இறந்து விட்டனர். இதனையடுத்து 2016ல் 22 யானைகளும், 2017ல் 19 யானைகளும், 2018ல் 12 யானைகளும் உயிரிழந்துள்ளன. கடந்த ஆண்டு 11 யானைகள் உயிரிழந்து விட்டன. இந்நிலையில் நடப்பாண்டு முடிவதற்குள்ளேயே 17 யானைகள் உயிரிழந்துள்ளன.

இதில் 3 யானைகள் மட்டுமே இயற்கையான முறையில் இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் காட்டுயானைகளுக்கான வன சூழல் தற்போது நிலைகுலைந்து விட்டதாக சுற்றுசூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் உடல்நல குறைவால் காட்டை விட்டு வெளியே வரும் யானைகள் வலசை பாதைகளில் இறந்து விடுகின்றன. இதனையடுத்து மர்மமான முறையில் இறக்கும் யானைகள் குறித்த ஆய்வினை மேற்கொள்வதற்காக, கோவை மாவட்ட சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதா,க மாவட்ட வன அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். சுற்றுசூழலின் ஆரோக்கியத்தை காட்டும் கண்ணாடிகளாக திகழ்பவைகள்தான் யானைகள்.

இந்நிலையில் இவற்றை வேட்டையாடுபவர்களை பிடிக்க கோவை சரகத்தில் 150 பேர் அடங்கிய வேட்டை தடுப்பு காவலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. கோவையில் ஏற்கனவே பல தனியார் அமைப்புகள் மலையடிவாரங்களில் உள்ள யானைகளின் வலசை பாதைகளை ஆக்கிரமித்து பெரும் கட்டடங்களை எழுப்பி விட்டனர். இதனால் எங்கு? செல்வது என தெரியாமல் ஊருக்குள் புகும் யானைகள் மனிதர்களை தாக்கும் நிகழ்வுகள் தொடர்கின்றனர். இதனால் யானைகளுக்கு காட்டுக்குள்ளே உணவுகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே காடுகளில் காணப்படும் யானைகளை நமது அடுத்த தலைமுறைகள் ஏடுகளில் காணப்படுவதை தடுக்க முடியும். இதனால் யானையை வேட்டையாடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக உள்ளது.

Tags : death ,activists ,Coimbatore , wild elephants in, Coimbatore,elephants killed ,
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...