×

5வது நாளாக விலை சரிந்து நகை பிரியர்களுக்கு கருணை காட்டும் தங்கம் : சவரன் ரூ.224 குறைந்து ரூ.40,608-க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.40,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு  உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த ஜூலை மாத இறுதியில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை 41 ஆயிரம் ரூபாயைக் கடந்தது.

இந்த நிலையில்  5-வது நாளாக   தங்கம் விலை சரிவை சந்தித்து வருவதால் விலை குறைந்து வந்ததால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி  விலை சிறிது அதிகரித்தாலும் பெரியளவில் மாறுதல் இல்லை என நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, தற்போது 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.40,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.29 குறைந்து ரூ.5,076-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு உயர்ந்து ரூ.76.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : jewelery lovers ,Shaver , Gold falls to 5th day, shows sympathy for jewelery lovers: razor drops by Rs 224 to Rs 40,608
× RELATED வாரிசுக்கு கருணை அடிப்படையில் வேலை...