×

மார்ச் 31ம் தேதிக்கு முன் வாங்கப்பட்ட பிஎஸ்-4 எஞ்சின் ரக வாகனங்களை பதிவு செய்யலாம்: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: மார்ச் 31ம் தேதிக்கு முன் வாங்கப்பட்ட பிஎஸ் -4 எஞ்சின் ரக வாகனங்கள் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த  ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பின்னர் பிஎஸ்-4  வாகனங்களை உற்பத்தி செய்யவோ விற்கவோ கூடாது என தடை விதிக்கப்பட்டது.  இதையடுத்து, வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகளுடன் வாகனங்களை விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. ஒரு லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அனுமதி வழங்கிய நிலையில், 2.55 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.  சமீபத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்றம் வழங்கிய அனுமதியை விட அதிகமாக வாகனங்களை விற்றது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல, என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், மறு உத்தரவு வரும் வரை பிஎஸ்-4  ரக வாகனங்களை பதிவு செய்ய தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், இந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மார்ச் 31ம் தேதிக்கு முன் வாங்கப்பட்ட பி.எஸ் -4 எஞ்சின் ரக வாகனங்கள் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டெல்லியில் மட்டும்  பிஎஸ் -4 எஞ்சின் ரக வாகனங்களை பதிவு செய்வதற்கான தடை தொடரும் என்றும், மார்ச் 31ம் தேதிக்கு பின் வாங்கப்பட்ட பிஎஸ் -4 எஞ்சின் ரக வாகனங்களை பதிவு செய்ய அனுமதி இல்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த புதிய உத்தரவின் படி, நாட்டில் விற்பனை செய்யப்பட்ட 39,000 பிஎஸ்-4 வாகனங்கள் பதிவு செய்ய இயலாத நிலை தொடர்ந்து நீடிக்கின்றது. அதாவது இ-வாகன தளத்தில் பதிவேற்றப்படாத அல்லது 31 மார்ச் 2020-க்கு பின்னர் விற்பனை செய்யப்பட்ட பிஎஸ்-4 வாகனங்களை பதிவு செய்ய இயலாது, என்பது குறிப்பிடத்தக்கது.  



Tags : Supreme Court ,PS , PS-4 Vehicles, Registration, Supreme Court
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...