கேரள மாநில நிலச்சரிவால் பாதிக்கபட்ட இடங்களில் முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு....!!

மூணாறு: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அடுத்த ராஜமலை பெட்டிமுடி பகுதியில், கனமழை காரணமாக கடந்த 7ம் தேதி அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வசித்து வந்த 20 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. வீடுகளின் மேல் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. தண்ணீரோடு அடித்து வரப்பட்ட மணல், வீடுகளை மூடியது. அங்கு வசித்த 78 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்து விட்டனர்.

இந்த துயரத்தில் இருந்து 3 பேர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மீதமுள்ள 75 பேர் மண்ணுக்குள் சிக்கி கொண்டனர். தப்பி வந்த 3 பேர் கொடுத்த தகவலின் பேரில் மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டது. மேலும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவு ஏற்பட்ட 7ம் தேதி மட்டும் 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

மேலும் 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. கடந்த 7ம் தேதி முதல் 7வது நாளாக இன்றும் மீட்பு பணி தொடர்ந்து வருகிறது.  நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 55 ஆக  உள்ளது.  இந்நிலையில், இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆகியோர் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: