×

சூறாவளி காற்று, கனமழைக்கு சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக விழுந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3ம் தேதி 9ம் ேததி வரை சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. சூறாவளி காற்று காரணமாக ஏராளமான மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், குடியிருப்புகள் மீதும் விழுந்தன. ஊட்டி - கூடலூர் சாலையில் மட்டும் சுமார் 300க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. இதுதவிர ஊட்டி - மஞ்சூர் சாலை, ஊட்டி - எடக்காடு சாலை மற்றும் கிராமப்புறங்களுக்கு செல்லும் சாலை என மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராட்சத யூகலிப்டஸ், சீகை, குப்ரசசஸ் மரங்கள் விழுந்தன.

பேரிடர் மீட்பு பணிகளுக்காக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 350க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  மேலும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் இமானுவேல் தலைமையில், போக்குவரத்தை சீரமைக்க சாலைகளில் விழுந்த மரங்களை இயந்திர வாள் கொண்டு வெட்டி அகற்றும் பணிகளை தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்டு அகற்றி வருகின்றனர். தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர். நேற்று ஊட்டி ராஜ்பவன் அருகே கோயில் மீது விழுந்து கிடந்த ராட்சத மரம், வி.சி. காலனியில் விழுந்த மரம் ஆகியவற்றை தீயணைப்பு துறையினர் வெட்டி அகற்றினர்.

இது குறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் இமானுவேல் கூறுகையில், ‘நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. 350 தீயணைப்பு வீரர்கள் களமிறங்கி மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். துவக்கத்தில் முக்கிய சாலைகளில் விழுந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.  இதேபோல் ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் வளர்ந்துள்ள ராட்சத கற்பூர மரங்கள் அகற்றும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மரங்கள் பெரிய அளவில் உள்ளதால் அவற்றை மேலிருந்து சிறிது சிறிதாக வெட்டி அகற்றக்கட்டு வருகிறது’ என்றார்.

Tags : fire department ,road , Hurricane Wind, Heavy Rain, Fire Department
× RELATED விஷ வண்டுகள் அழிப்பு