கேரளாவில் 88 லட்சம் குடும்பங்களுக்கு இலவச மளிகை பொருட்கள் வழங்கப்படும்: ஓணம் பண்டிகையையொட்டி முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு..!!

திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையையொட்டி  88 லட்சம் ரேஷன் அட்டை தாரர்களுக்கு இலவச மளிகை பொருட்கள் வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வகையில் மத்திய, மாநில அரசுகள் இலவச மளிகை பொருட்கள் ரேஷன் கார்டுகள் மூலம் அளித்து வருகின்றன. இந்நிலையில் கேரள மாநிலத்தில் மிக முக்கியமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கு இலவச மளிகை பொருட்கள் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட 16 பொருட்களை கொண்ட மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பு  88 லட்சம் அட்டை தாரர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களை பேக்கிங் செய்யும் பணிகள் சுமார் 2 ஆயிரம் இடங்களில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, மஞ்சள் அட்டை தாரர்களுக்கு இன்று முதல் 16ம் தேதி வரையிலும் மீதமுள்ளோருக்கு வரும் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலும் இலவச பொருட்கள் வழங்கப்படும் எனவும் திரு. பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

Related Stories: