நேர்மையாக வரி செலுத்துவோரின் வாழ்க்கை மாறும் போது நாடு முன்னேறும்: HonoringTheHonest திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரை.!!!

டெல்லி: வரி செலுத்துவோரை கவுரவிக்கும் விதமாக வெளிப்படையான வரி விதிப்பு- நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவித்தல் என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து,  நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இது புதிய இந்தியாவின் புதிய நிர்வாக மாதிரியாகும். கடமையை மிக முக்கியமாக வைத்து அனைத்து வேலைகளையும் செய்து வருகிறோம்.வரி செலுத்துவோருக்கும் வருமான வரித்துறைக்கும்  இடையே நம்பிக்கையை வளர்க்கும். வரி செலுத்துவோருக்கு தொந்தரவுகளை குறைக்கும் என்றார்.

வரி செலுத்துவோர் மதிக்கப்படுவர். வரி செலுத்தும் முறையில் நம்பகத்தன்மையை அதிகப்படுத்தும் தேவை உள்ளது. வரி கணக்குகளை சரிபார்ப்பவர் யார் என்பதை தெரிந்துகொள்ள முடியாத வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரி  செலுத்தும் முறையில் முதல் நிலை சீர்திருத்தம் இது.

வெளிப்படையான கணக்கிடும் முறை வரும் 25-ம் தேதி முதல் தொடங்குகிறது. வரி செலுத்துவோர் மீதான அழுத்தங்களை குறைக்கும் சீர்திருத்தங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரிவிதிப்பில் செய்யப்பட்டு வரும் சீர்த்திருத்த  நடவடிக்கைகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வரி செலுத்துவோரை வருத்தச் செய்யும் 1,500 விதிகள் நீக்கப்பட்டுள்ளது. புதிய வரி விதிப்பு முறை மக்களுக்கு எளிதாக உள்ளது. மக்களை மையப்படுத்திய வரி விதிப்பு முறைகள் கொண்டு  வரப்பட்டுள்ளன. சீர்திருத்தங்களுக்கான சிந்தனை மற்றும் அணுகுமுறை மாறியுள்ளன.

இந்தியா மீதான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. முகநூல் முறையீடு செய்வதற்கான வசதி செப்டம்பர் 25 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும். நேர்மையாக வரி செலுத்துவோரின் வாழ்க்கை மாறும் போது  நாடு முன்னேறும். நாட்டு மக்களின் வாழ்க்கையிலிருந்து அரசின் தலையீட்டை குறைப்பதற்கான ஒரு பெரிய படியாகும். மக்களின்  வாழ்க்கையில் அரசின் தலையீட்டை குறைக்கும் பெரும் முயற்சி என்றார். இந்ந நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் சீதாராமன், இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories: