மனைவி, பிள்ளைகளுக்கு அனுமதி: வேலை செய்த இடத்தில் மீண்டும் பணியாற்ற எச்1பி விசா மூலம் வரலாம்...அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு.!!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் பணியாற்ற எச்1பி, எச்4, எச்2-பி மற்றும் எல்1 உட்பட  ‘எல்’ ரக விசாக்கள் அளிக்கப்படுகிறது. இதை வைத்துதான் இந்தியர்கள் 5 லட்சம் பேர் அங்கு பணியாற்றி வருகின்றனர். இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் அவ்வப்போது விசாவை புதுப்பித்து தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர். இது தவிர, புதிதாக ஆண்டுதோறும் 3 லட்சம் இந்தியர் வரை எச்1பி விசா பெற விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இவர்களில் கையில் விசா கிடைத்து மட்டும் கணிசமான பேர் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

ஒரு பக்கம் கொரோனா அச்சுறுத்தல் அமெரிக்கா உட்பட எல்லா நாடுகளையும் பிழிந்து கொண்டிருக்கிறது. இதனால், பல பெரிய நிறுவனங்கள் கூட இழுத்து மூடப்பட்டன. பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். அமெரிக்காவில்  மட்டும் ஒரு கோடி பேர் வேலை இழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கர்கள். தற்காலிக பணியாற்றி வரும் இந்தியர்களிடம் இருந்து அமெரிக்கர்களுக்கு பணிகளை கொடுக்கவே மறைமுகமாக எச்1பி, எல்1 விசாக்களை புதுப்பிக்காமல் அமெரிக்கா ரத்து செய்தது. எச்1பி, எல்1 உட்பட்ட விசாக்களை ரத்து செய்யும் உத்தரவை டிசம்பர் வரை நீட்டித்து அதிபர் டிரம்ப் முன்னதாக தெரிவித்தார். இந்தியாவில் இருந்து மட்டும் ஆண்டுக்கு 3 லட்சம் பேர் அமெரிக்காவில் பணியாற்ற, மேற்படிப்பு படிக்க செல்ல விண்ணப்பிக்கின்றனர். அவர்களில் இரண்டு லட்சம் பேர் வரை ஐடி துறையில் பணியாற்ற செல்வற்காக செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஏற்கனவே அமெரிக்காவில் வேலை பார்த்தவர்கள் எச்1பி விசா மூலம் மீண்டும் அமெரிக்கா திரும்பி பணியாற்றலாம். ஏற்கனவே தாங்கள் வகித்த வேலையில் சேர்ந்து மீண்டும் பணியாற்றுவதாக இருந்தால் மட்டுமே அமெரிக்கா திரும்பலாம் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும், எச்1பி விசா ஊழியர்கள் தங்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: