×

பேரறிவாளன் பரோல் வழக்கு 17ம் தேதிக்கு தள்ளிவைப்பு

சென்னை: பேரறிவாளனுக்கு பரோல் கேட்டு அவரது தாய் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டணை பெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், தனது மகன் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க கோரி, அவரது தாய் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், வி.எம்.வேலுமணி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது, இரண்டு ஆண்டுகளாகியும் ஆளுநர் முடிவை அறிவிக்காதது ஏன் என்பது உள்ளிட்ட கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பல்நோக்கு விசாரணை முகமை ஏன் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை. கடந்த 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டு பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டதற்கான அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, இந்த வழக்கை வரும் திங்கள் கிழமைக்கு தள்ளிவைக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.

Tags : Perarivalan , Perarivalan, parole case, 17th, adjournment
× RELATED பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மார்ச் மாதம் விசாரணை!!